Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

அக்டோபர் 13, தசரா விடுமுறையில் ஆர்.ஆர்.ஆர்.(RRR) திரைப்படம் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான ‘RRR’ திரைப்படம், தசரா பண்டிகை விடுமுறை தின வெளியீடாக வரும் அக்டோபர் 13-ம் தேதியன்று உலகெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்தில் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஆந்திராவின் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை இந்தப் படத்தில் கற்பனை கலந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ மெளலி.

திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “RRR’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை அதே நாளில் திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாட இருப்பதில் நாங்கள் பெரிய மகிழ்ச்சியை அடைகிறோம்..” என்றார்.

டி.வி.வி. தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த RRR’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News