Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“ரஜினிக்கு சரியான அரசியல் புரிதல் இல்லை”: ரோஜா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ரஜினி, “சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ‘விஷன் 2020’ என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் 1996 ஆம் ஆண்டில் ஒரு புரட்சியைக் கொண்டு வந்தார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாத போது அந்த துறை பற்றி புரிந்து கொண்டு ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக மாற்றினார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் ஐதராபாத் நகரம் மாநகரமாக உருவெடுத்தது. அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி” என பேசியிருந்தார்.

இந்த நிலையில் ரஜினியின் பேச்சுக்கு ஆந்திர மாநிலம் சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா ”
ரஜினி நடிப்பின் காரணமாக அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் பேசியது என்.டி.ஆரின் ரசிகர்களுக்கும் அவரின் தொண்டர்களுக்கும் வேதனை அளித்திருக்கும். என்.டி.ஆரை. அவமதித்தவர் சந்திரபாபு நாயுடு என்பது வரலாறு.

தவிர ஹைதராபாத் வளர்ச்சியடைவதற்கு சந்திரபாபு நாயுடு ஆட்சி காரணம் இல்லை.  அவரது ஆட்சி 2003ல் முடிவுக்கு வந்துவிட்டது.

அதன் பிறகு முதல்வரான,  ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, ஏழை மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை அளித்தார். தெலுங்கர்கள் வெளிநாட்டில் பணிபுரிவதற்கு அவர்தான் காரணம்.
இதை ரஜினி நினைத்துப் பார்க்க வேண்டும்.

ரஜினிக்கு தெலுங்கு மாநிலங்களில் நடக்கும் அரசியல் குறித்து சரியான புரிதல் இல்லை ” என்றார்.

- Advertisement -

Read more

Local News