Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விமர்சனம்: வாரிசு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜயின் வாரிசு படம் இன்று வெளியாக  உள்ளது.

தில் ராஜூ தயாரிக்க, வம்சி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக  ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன்  பிரகாஷ் ராஜ், ஷாம், சம்யுக்தா, பிரபு, சங்கீதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். தமன்  இசை அமைக்க கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு: கேஎல் பிரவீன்.

கதை

மிகப்பெரிய கோடீஸ்வரரான சரத்குமாருக்கு மூன்று மகன்கள். அவர்களில் விஜய் கடைக்குட்டி.  எப்போதும் பணம் பணம் என்றே ஓடும் சரத்குமாரை, விஜய்க்கு பிடிக்கவில்லை. வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டுக்குத் திரும்புகிறார். அங்கே ஏகப்பட்ட பிரச்சினைகள். இவற்றை எல்லாம் விஜய் தீர்த்தாரா என்பது மீதிக்கதை!

விமர்சனம்:

வழக்கமான விஜய். ஆட்டம், அதிரடி சண்டை, பஞ்ச் டயலாக் என அவரது ரசிகர்களை திருப்தி படுத்துகிறார்.  அவரது அப்பாவாக வரும் சரத்குமார் வழக்கம்போல சிறப்பாக நடித்து உள்ளார். பிரகாஷ்ராஜ் தனது வில்லத்தனத்தில் எப்போதும்போல முத்திரை பதிக்கிறார். ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா, பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டுகிறார். நடிக்க வாய்ப்பு இல்லை.

படம் முழுதும் பிரம்மாண்டம்.  மிகப்பெரிய மாளிகை வீடு, பிரமிக்கவைக்கும் சுரங்கங்கள், பிரம்மாண்டமான செட்களில் பாடல்…  அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். தமன் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிகர்களை கவர்கின்றன.

கதைதான் நம்ப முடியாதபடி  இருக்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் நிறுவனத்தின் சேர்மேன் யார் என்று வாக்கெடுப்பு நடக்க.. அங்கே காமெடி செய்து (கதை சொல்லி) ஜெயிக்கிறார் விஜய். பிரகாஷ் ராஜ் நடிப்பில் குறையில்லைதான். ஆனால், அவர் போடும் திட்டங்களை எல்லாம் முன்பே அறிந்து தவிடு பொடி ஆக்குகிறார் ஹீரோ விஜய்.  ஆகவே அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.

குடும்ப பிரச்சினை என ஆரம்பித்து, தொழில் போட்டி ஆகி.. இடையில்  சிறுமி கடத்தல்.. விஜய் மீட்பது என சென்று.. இறுதியில் குடும்பம் ஒன்றிணைகிறது.

“எல்லாரும் ஒத்துமையா இருக்கணும்” என்று மெசேஜ் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.

மொத்தத்தில், விஜய் ரசிகர்கள் விரும்பும் படம்!

- Advertisement -

Read more

Local News