Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

 திரை விமர்சனம்:  குஷி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடவுளை நம்பாத விஞ்ஞானி லெனின் சத்யா (சச்சின் கேக் டேகர் ) இவரது மகன் விப்லவ். (விஜய் தேவரகொண்டா ) ஆன்மிக சொற்பொழிவு, ஜோதிடம் என்று இருப்பவர் சதுரங்கம் ஸ்ரீனிவாச ராவ். (முரளி சர்மா ) இவரது மகள் ஆராத்யா (சமந்தா)

விப்லவும், ஆராத்யாவும் சந்தர்ப்ப வசத்தால் காதல் வயப்படுகிறார்கள். காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சில மாதங்கள் கழித்து ஆராத்யா கருவுறுகிறார். ஆனால் கருசிதைவு ஏற்படுகிறது. ஜாதகம், நாள் நட்சத்திரம் பார்க்காமல் செய்தது தான் இதற்கு காரணம் என்கிறார் சதுரங்கம் ஸ்ரீநிவாசராவ். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தர்க்கம் செய்கிறது விப்லவ் குடும்பம். காதலர்கள் மத்தியில் விரிசல் வருகிறது. இறுதியில் ஜெயித்தது காதலா? விஞ்ஞானமா? சாஸ்திரமா? என்று விவரிக் கிறது
சந்திராயன் ராக்கெட் விடும் காலத்திலும் ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டுமா  போன்ற கேள்விக்கான பதிலையும் தீர்வையும் முன் வைக்கிறார் இயக்குநர்.

விஜய் தேவராகொண்டா சமந்தா இடையிலான காதல் காட்சிகள் ஒரு கவிதை வாசித்த உணர்வை தருகிறது.

விஜய் தேவரகொண்டா உருகி உருகி காதலிக்கும் போதும், ஒரு கணவனாக கோபப்படும் போதும் ரசிக்க வைக்கிறார்.

சமந்தாவின் நடிப்பு நம்மை நம் வீட்டு பெண்ணை போல் உணர செய்கிறது. முரளி சர்மாவும், சச்சினும் ஒரு ஈகோ பிடித்த அப்பாகளை கண் முன் காட்டுகிறார்கள்.

முரளியின் ஒளிப்பதிவில் காஷ்மீரின் மலை முகடுகளும், பனிப்பொலிவும் அழகு, அழகு.  அப்துல் வகாபின் இசையில் காதல் ரசம் சொட்டுகிறது.

சாஸ்திர சம்பரதாயம் மற்றும் மாடர்ன் சயின்ஸ் இரண்டையும் வைத்து நாம் அடிக்கடி குழப்பிக்கொள்வோம். குஷீ படத்தை பார்த்தால் உங்களுக்கு விடை கிடைக்க வாய்ப்பு உண்டு.

- Advertisement -

Read more

Local News