Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விமர்சனம் : ‘பாபா பிளாக் ஷீப்’  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் உருவாக்கத்தில்  அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசையமைத்து உள்ளார்.

தற்போது சமுதாயத்தில் அதிகரித்து வரும் மாணவ, மாணவியர்களின் தற்கொலைதான் கதைக்கரு. மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தப் பிரச்சினைகள், பெற்றோரின் கண்டிப்பு, இணையத்தில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள் ஆகியவை பற்றி பேசியுள்ளது படம்.

சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே வளாகத்தில் குறுக்கே சுவர் எழுப்பி ஆண்கள் பள்ளி, இரு பாலர் பயிலும் பள்ளியை நடத்தி வருகிறார். அவர் மரணத்திற்குப் பிறகு பள்ளி ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனாலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஆண்கள் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும், இரு பாலர் பயிலும் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆனால் ஒரு சண்டையில் இரு குழுவும் ஒன்றாக இணைகிறார்கள். அப்போது பெயர் குறிப்பிடாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக எழுதிய கடிதம் இவர்கள் கையில் கிடைக்கிறது.

அந்த கடிதத்தை எழுதியது யார், காரணம் என்ன,  தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா என்பதுதான் மீதிக் கதை.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பார்த்து பழகிய பல முகங்கள் படம் முழுவதும் வருவதால் ரசிகர்கள் படத்துடன் எளிதாக கனெக்ட் ஆகி விடுவார்கள்.அபிராமியின் பின்னணி கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அடிப்படையாக கொண்டு காட்சிப்படுத்தப்பட்டாலும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

இடைவேளை வரை, முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்கள் அதகளம்தான். பள்ளிக்காதல், வகுப்பறை அதிரடிகள் என கலகலப்பாக உள்ளது. இடைவேளைக்குப் பிறகு, சீரியஸாக சென்று சில முக்கிய கருத்துக்களைச் சொல்கிறது படம்.

‘பாபா பிளாக் ஷீப்’ ரசிகர்களை கவரும்..!

- Advertisement -

Read more

Local News