Wednesday, September 18, 2024

விமர்சனம்: ‘ஆர் யூ ஓகே பேபி?’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, உணர்வு பூர்வமாக சொல்லப்பட்டு இருக்கும் சிறப்பான படம்.

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஹவுஸ் ஓனர்’ உட்பட சில படங்களை இயக்கி இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது இயக்கியுள்ள படம், ‘ஆர் யூ ஓகே பேபி?’.

ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது பற்றிய படம். அது தொடர்பான 3 பெண்களை  சுற்றி வருகிறது கதை.

ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட குற்றம் நடக்கிறது. அதன் விளைவுகள், பிரச்சினைகள், அது தொடர்பா கநடக்கிற விசாரணை நடைமுறைகள் ஆகியவற்றை உணர்வு பூர்வமாக சிறப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஒரு குழந்தையை தத்தெடுத்த அம்மாவாக அபிராமியும், கணவராக சமுத்திரக்கனியும் மிகப் பொருத்தம்.

இருவருமே அற்புதமாக நடித்து உள்ளனர். இவர்களது இயல்பான நடிப்பு, திரைப்படம் என்பதை மீறி, நிஜத்தில் ஒரு சம்பவத்தை உணர்வதாக உள்ளது.‘முருகா’ அசோக் நெகட்டிவ் கேரக்டரில் அசத்துகிறார்.  அசோக் கலைராணி, முல்லையரசி, ‘ஆடுகளம்’ நரேன், மிஷ்கின், பாவெல் நவகீதன் என அனைவருமே  பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

உணர்வுபூர்வமான, அழுத்தமான கதைக்கு ஏற்ற இசையை அற்புதமாக அளித்து இருக்கிறார் இளையராஜா.

அதே போல ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதம்.

சிறப்பான படம் என்பதோடு, சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்தும் படம் இது.

அவசியம் பர்க்கவேண்டும்.

குறிப்பாக நீதிமன்ற காட்சியில் அவரது பின்னணியின் இசை அபாரம்..

 

 

- Advertisement -

Read more

Local News