நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகி, வரும் 29-ம் தேதி வெளியாக உள்ள ‘குலு குலு’ படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
இந்தப் படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த ‘குலு குலு’ படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ளார். இவர் ‘மேயாத மான்’, ‘ஆடை’ போன்ற படங்களை இயக்கியவர். அது தவிர ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ போன்ற படங்களின் திரைக்கதையிலும் பணியாற்றி உள்ளார்.
இந்த ‘குலுகுலு’ திரைப்படம் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக் கருவில் உருவாகியிருக்கிறது. வரும் ஜூலை 29-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்த படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இப்போது இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளனது.
இந்த நிறுவனம் கடைசியாக வெளியிட்ட ‘விக்ரம்’ படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.