இயக்குனர் தங்கர் பச்சான் எழுதிய சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகிவரும் திரைப்படம் ’’கருமேகங்கள் கலைகின் றன’’. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருவி புகழ் அதிதி பாலன் நடிக்கிறார். கதையின் ஆணி வேராக இப்பாத்திரத்தில் நடிக்க இந்தியாவின் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகையை தேர்வு செய்ததில் இறுதியாக அதிதி பாலன் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. சவாலான அப்பாத்திரத்தில் தனது மெருகேறிய நடிப்பின் மூலம் படைப்புக்கு வலுவூட்டுவார் என நம்புகிறேன்.”
கதையின் வலுவான ஆழமான பாத்திரத்தில் அதிதி பாலன் பொருத்தமாக இருப்பார். எனவே அவரை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சி என கூறினார் இயக்குனர் தங்கர் பச்சான்.