‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, விக்ரம் தனது 63வது படமான ‘விக்ரம் 63’ படத்தைத் தொடங்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறுகிய காலத்தில் தயாரிக்கப்படவுள்ளது.

நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. ‘விக்ரம் 63’ படத்துக்கு ‘வீரமே ஜெயம்’ என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகு, விக்ரம் மீண்டும் அருண் குமாரின் ‘வீர தீர சூரன்’ பாகம் 1-ல் இணைவார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியிருப்பது பாகம் 2-க்கான கதையாகும். ‘காந்தாரா’ படத்தின் முன்கதை தற்போது உருவாகுவது போல, ‘வீர தீர சூரன்’ படத்தின் முன்கதையும் பின்னர் வரவுள்ளது என்றும், அதற்கான கதையை அருணிடம் தயார் செய்யுமாறு விக்ரம் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.