Friday, April 12, 2024

விக்ரம் பிரபுவின் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் டைட்டில் லுக் வெளியானது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்திக் மூவி ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் புதிய படம் ‘இரத்தமும் சதையும்’.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடிக்கிறார். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநரான ஹரேந்தர் பாலசந்தர்.

இந்த ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

- Advertisement -

Read more

Local News