ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனம் செயல்படுகிறது. இது கோடிக்கணக்கில் பண மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கண்டறிந்தது.
இதையடுத்து மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் கொல்கத்தா, போபால், மும்பை ஆகிய இடங்களில் 417 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்தது.
இந்த செயலியை விளம்பரம் செய்ய ரன்பீர் கபூர் பணம் வாங்கி இருப்பதாகவும் சமீபத்தில் அந்த செயலியின் முக்கியப் பிரமுகராகச் சொல்லப்படும் ஒருவரின் திருமணத்தில் அவர் கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் வருகிற 6 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சொல்லியுள்ளது. ரன்பீர் கபூரைத் தவிர, குறைந்தது 15 முதல் 20 பிரபலங்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரபலங்கள் அனைவருக்கும் ஹவாலா மூலம் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.