அவ்வப்போது, ‘ரஜினி நடிக்கும் கடைசி படம் இதுதான்.. இதன் பிறகு அவர் ஓய்வெடுக்கப் போகிறார்’ என்று தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
பாபா படம் வெளியான போதும் இதே போன்ற தகவல் வெளியானது.
இது குறித்து அப்படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, பேசியிருக்கிறார். அவர், “பாபா படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருக்கும்போது, இந்த விசயம் குறித்து ரஜினியிடம் கேட்டேன். அவர் புன்னகைத்தை, தனது கைகளை மேலே காட்டினார். அதாவது இறைவன் செயல் என்பது போல.
ஆனால் நான் உணர்ந்தது என்னவென்றால்.. சினிமா மீது ரஜினிக்கு இருப்பது ஆசை.. ஆர்வம் அல்ல. காதல். அதற்கு முடிவே கிடையாது.. ஆகவே ரஜினியின் திரைப்படம் தொடரவே செய்யும்” என்றார்.