அருணாசலம் படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்து அசரடித்தவர் வடிவுக்கரசி. அந்த அனுபவம் குறித்து சமீபத்தில், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டேன்:
“அந்த படத்தில் நடிக்கும் போது உண்மையாகவே மொட்டை போட்டு இருந்தேன். அதாவது, அதற்கு முன்பாக நான் நடித்த குடும்பச் சங்கிலி படத்தின் கதாபாத்திரத்துக்காக போட்ட மொட்டை.
இந்த கோலத்தோடுதான், ராகவேந்திரா கல்யாண மண்டபம்.. அங்குதான் “அருணாசலம் படத்தில் வில்லி வேடம்” என்றார்கள். எனக்கு பயமாக போய்விட்டது. ரஜினிக்கு வில்லி என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்களே என தயங்கினேன்.
பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு போன் போட்டு கேட்டேன். அவர், “நடிப்பு என்பது அனைவருக்கும் தெரியும். நீ அந்த கதாபாத்திரத்தில் நடி” என்றார். அதன் பிறகே ஒப்புக்கொண்டேன்.
அது கூன் விழுந்த கதாபாத்திரம். பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட ஒரு கூட்டில் பஞ்சை வைத்து முதுகில் இறுக்கமாக கட்டி விடுவார்கள். அதை வைத்துக்கொண்டு, அசைவதே கஷ்டம். முதுகு வலிக்கும். சிரமப்பட்டு நடித்தேன்.
இதை ஒரு முறை மேக்அப் மேனிடம் சொன்னேன். இது எப்படியோ ரஜினி காதுக்கு போய்விட்டது.
அன்றிலிருந்து, “வடிவுக்கரசி சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்துவிடுங்கள்.. அவர் சிரமப்படுகிறார்” என்று சொல்லிவிட்டார் ரஜினி.
அந்த அளவுக்கு பிறரது சிரமத்தைப் புரிந்துகொள்ளும் குணம் கொண்டவர் அவர்” என்றார் வடிவுக்கரசி.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..