சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான ’கபாலி’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரஜினியின் ’கபாலி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், ஆனால் பா ரஞ்சித் விருப்பப்படி விட்டு விடுங்கள் என்று ரஜினிகாந்த் கூறிவிட்டதால் தான் அதில் தான் தலையிட வில்லை என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.
ஆகவே கலைப்புலி தாணு, ‘கபாலி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றம் செய்து விரைவில் ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.