மௌலி இயக்கத்தில் பிரதாப் போத்தன், சுஹாசினி ஆகியோரின் நடிப்பில் 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “நன்றி மீண்டும் வருக”.
இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் முக்கிய நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த மௌலி, முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க திட்டமிட்டார். ஆனால் அவர் அப்போது வெளிநாட்டில் இருந்தார்.
அடுத்து அவர் ரஜினியை அணுக.. அவரும் ஒப்புக்கொண்டார். மேலும், “என் வீட்டிலேயே படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்கள்” என்று பெருந்தன்மையுடன் கூறினார். அதன்படியே படப்பிடிப்பும் நடந்தது.
பிறகுதான் படக்குழுவினருக்கு ஒரு விசயம் தெரிந்தது.. அதற்கு முந்தைய நாள்தான் ரஜினிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. மாடி அறையில் மனைவி லதாவும், குழந்தையும் இருக்க… தரை தளத்தில் படப்பிடிப்பில் நடித்திருக்கிறார் ரஜினி.
மௌலி நெகிழ்ந்துபோய், “இந்த நேரத்தில்.. நடிக்க நீங்கள் ஒப்புக்கொண்டு இருக்க வேண்டுமா.. அதுவும் வீட்டில்..” என கூற, அதற்கு ரஜினி, “நீங்கள் என் நண்பர்.. உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா” என சிம்பிளாக சொல்லிவிட்டார்.
தவிர தான் நடித்ததற்காக சம்பளமும் வாங்கவில்லையாம்!