ரஜினியை திட்டிய கே.பாலசந்தர்!

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்கள் உருவாக்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினி,கமல் இரண்டு மகா நடிகர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இந்த சிகரம் தான்.

ரஜினியை வைத்து பல ஹிட் கொடுத்துள்ள பாலசந்தர். ஒரு படத்தின் சூட்டிங்கில் ஷாட் முடிந்ததும் ரஜினி தனது அறைக்கு சென்றுவிட்டார். மீண்டும் தனது ஷாட் வர நேரமாகும் என திட்டமிட்டவர், மது அருந்தி விட்டு அப்படியே புகைபிடித்தக்கொண்டு இருந்தார். அப்போது அஸிஸ்டண்ட் ஒருவர் வந்து, இயக்குநர் பாலச்சந்தர் அழைப்பதாக கூறினார்.

“அதற்குள்ளா..” என அதிர்ந்து போய்விட்டார். தான் மது அருந்தியது பாலச்சந்தருக்கு தெரிந்துவிடக்கூடாது என, பல் தேய்த்து குளித்து விட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் ரஜினி குடித்திருப்பது பாலசந்தருக்கு தெரிந்து விட்டது  ரஜினியை தனி அறைக்கு அழைத்துச் சென்று, ‘சூட்டிங்கிற்கு குடிச்சிட்டு வந்திருக்கிறாயா? என்று வாய்க்கு வந்தபடி வசை பாடியிருக்கிறார் கே பாலசந்தர். அதில் இருந்து படப்பிடிப்பு நேரத்தில் குடிக்கு குட்பை சொல்லிட்டாராம் ரஜினி.