Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நம்பி படம் பாக்க வர மக்களை நாம் ஏமாத்திட கூடாதுனு சொன்னார் ரஜினி சார் – இயக்குனர் ஞானவேல்! #VETTAIYAN AUDIO LAUNCH

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது‌‌. அவ்விழாவில் பேசிய இயக்குனர் ஞானவேல், ரஜினிசாருக்கு தெரிந்த ரசிகர்களைவிட தெரியாத ரசிகர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அதில் நானும் ஒருவன் தான்.உங்கள் படத்தின் கொண்டாட்டத்தை நானும் மனசுக்குள் ரசித்தது உண்டு.

ரஜினி சார் எப்போதும் என்னிடம் தயாரிப்பாளர்கள் பணத்தை செலவு செய்கிறார்கள், அவர்கள் பணம் எடுக்க வேண்டும். நம்பி படம் பார்க்க வரும் மக்களை நாம் ஏமாற்றவிட கூடாது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருமுறை, நீங்கள் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. எப்படி எல்லாத்தையும் தக்க வைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் Adjust Accomodate Adopt என்று சொன்னார். நானும் அவர் சொன்னதை தற்போது பின்பற்றுகிறேன் என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News