ரஜினி ஆரம்ப காலத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில்தான் நடித்தார். ஒரு பைக் மற்றும் வீடு சம்பாதிக்கிற அளவுக்கு பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்திருக்கிறார். அதற்காகவே எந்த ஒரு சின்ன கேரக்டராக இருந்தாலும் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இவருக்கு வந்ததே இல்லை.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைஞானம் இவரை திடீரென்று அழைத்து, ‘நான் தயாரிக்கும் பைரவி படத்தில் ஹீரோவாக நீ தான் நடிக்க வேண்டும்’ என்றார். ரஜினி மறுக்க, கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார்.
அதன் பின் ரஜினி தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து சூப்பர் ஸ்டார் ஆனார். இந்நிலையில் இவர் கலைஞானிடம் மறுபடியும் இணைந்து பணியாற்ற முடியவில்லை.
‘அவருக்கு நான் வீடு வாங்கிக் கொடுக்கிறேன் அந்த வீட்டில் தான் அவருடைய கடைசி மூச்சு போகணும்’ என்று மிகவும் நன்றி கடனுடன் கூறி இருக்கிறார். சொன்ன மாதிரி வாக்குறுதியை நிறைவேற்றி மூன்று அறைகள் வைத்து ஒரு வீடு வாங்கி கொடுத்து அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசத்திற்கும் சென்று தயாரிப்பாளரை நெகிழ வைத்து இருக்கிறார்.
இது குறித்து கலைஞானம், “என்னை இன்ப அதிர்ச்சி அடையச் செய்துவிட்டார் ரஜினி!” என்று சொல்லி இருக்கிறார்.