நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றம் அமைப்பு மீண்டும் பழையபடி ரஜினி ரசிகர் மன்றமாக மாறியது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று தனது ராகவேந்திரா மண்டபத்தில் கலந்தாலோசனை நடத்தினார்.
அப்போது நான் இனிமேலும் அரசியலுக்கு வரப் போவதில்லை. அதனால் நமது மன்றத்தின் பெயரை பழையபடி ரசிகர் மன்றமாகவே மாற்றிவிடலாம் என்று கூறினாராம். இதனை நிர்வாகிகளும் ஏற்றுக் கொள்ள.. அதன்படி துணை அமைப்புகள் எதுவும் இல்லாமல் ஒற்றை அமைப்பாக ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மீண்டும் முழுமையாகச் செயல்படும் என்று ஒரு அறிக்கை மூலமாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
