இசையமைப்பாளர் தேவா தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல கானா பாடல்களை கொடுத்தவர். ஆனால் தேவா இசையமைத்த ரஜினி படத்தின் டைட்டில் இசை இன்று வரை படத்தில் நிலைத்து நிற்கிறது.
இது பற்றி தேவா பேட்டி ஒன்றில் கூறும்போது அண்ணாமலை திரைப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ரஜினி பெயர் டைட்டில் இசை வேண்டும் என்றார். நிறைய இசையை போட்டு பார்த்தோம் எதுவும் சரிவரவில்லை. இயக்குனர் ஒரு ஐடியா சொன்னார். ஜேய் விட்மன் பாணியில் இசை இருந்தால் நல்லா இருக்கும் என்றார்.
அப்படியே ரூட்டு போட்டு இசையை கொண்டு வந்தேன் டங் ட்டா டங்…என்ற மியூசிக் இப்படித்தான் ரஜினி பெயருக்கு உருவானது என்று கூறினார் இசையமைப்பாளர் தேவா.