Thursday, April 11, 2024

‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் தமன்னா கிளாமர் நடனத்தில் அசத்தியிருந்தார். குறிப்பாக பாடலின் இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ்  “என்னிடம் பாட்டு எழுத கூறும் போது தமன்னாவுக்கு மட்டும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறினார்கள். ரஜினிகாந்த் இந்த பாடலில் தோன்றியது குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.  பாடலை பார்த்தபோது ரஜினிகாந்த் எப்படி இந்த பாடலில் வந்தார் என்று ஆச்சரியப்பட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து குறிப்பிட்ட பாடலில் ரஜினி வருவாரா இல்லையா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

- Advertisement -

Read more

Local News