Wednesday, November 20, 2024

ரஜினி போட்ட டிரஸ்! அதிர்ந்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினி எத்தனை எளிமையானவர், படப்பிடிப்புக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார் என்பது அனைவரும் அறிந்த விசயம். இது குறித்து, ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார் அசோசியேட் இயக்குநர்.

இவர், ரஜினியின்  ரஜினிகாந்த் நடித்த, “எல்லம் உன் கைராசி” படத்திலும் பின்னாளில் ‘அண்ணாமலை”, “முத்து” படங்களிலும் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றியவர்.

இவர், “எல்லாம் உன் கைராசி’படத்தின் போது ஒரே ஒரு காட்சிக்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் டிரஸ் தயாரித்தோம். காட்சியும் படமாகி விட்டது.

ஆறுமாதம் கழித்து படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியபோது, கதையைக் கொஞ்சம் மாற்றும்படி ஆகிவிட்டது.

மாற்றப்பட்ட கதையின்படி கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி அந்த ஸ்பெஷல் டிரஸ்ஸுடன் ஃபைட், செய்ய வேண்டும். அதாவது முதல் காட்சியின்  கண்டினியூட்டி கிளைமாக்ஸ் காட்சியாகிவிட்டது.

சண்டைக் காட்சி என்பதால் ரஜினிக்கு டூப்பாக நடித்த ஸ்டண்ட் நடிகருக்கும் அதே மாதிரி டிரஸ் தயரித்தாக வேண்டும். ஆனால் நாங்கள் எவ்வள்வோ முயன்றும் அதே டிசைன் துணி எங்கும் கிடைக்கவில்லை. இதனால் ‘டூப்’ நடிகருக்கு டிரஸ் தைக்க முடியவில்லை. படப்பிடிப்புக்கு ரஜினியும் வந்துவிட்டார்,

அவரிடம் போய், பிரச்சினையைச் சொல்லிவிட்டேன். ‘’முடிந்தவரை முயற்சி பண்ணுங்க இல்லைன்னா பாத்துக்கலாம்’’ என்றார்.

‘’ஒருவேளை முதல் காட்சியையும் வேறு டிரஸ் போட்டு ரீ-ஷீட் செய்யச் சொல்வாரோ?” என்று பயந்தேன்.

“ரஜினிக்கு முதலில் அந்த டிரஸ்ஸைப் போட்டு அவர் ஷாட்டுகளை எல்லாம் முதலில் எடுத்து விடுவோம். அவர் போனதும் அந்த டிரஸ்ஸை டூப்புக்கு போட்டு டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுத்து விடுவோம்’’ என்றார், டைரக்டர்.

படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் ரஜினி சம்பந்தப்பட்ட ஷாட்களாகவே எடுத்துக் கொண்டிருந்தோம்.

டூப் நடிகர் தூரத்தில் சும்மா நின்று கொண்டிருந்தார். அதை ரஜினி கவனித்து விட்டார். டைரக்டரிடம்,’’ஏன் டூப் நடிகரின் ஷாட்டுகளை எடுக்காமலேயே இருக்கிறீர்கள்?’’என்று கேட்டார்.! வி

ஷயத்தைச் சொன்னோம்.  “நோ!நோ! டூப் நடிகரின் ஷாட்டுகளையும் கூடவே எடுத்துருங்க. அதுதான் நல்லது‘’ என்ற ரஜினி, தானே தனது டிரஸ்களைக் கழற்றி டூப் நடிகருக்கு அணிவித்தார்! டூப் நடிகரின் ஆக்‌ஷனைப் படம்பிடித்ததும் ரஜினி தானே அந்த நடிகரின் உடையைக் கழற்றி, தனக்கு அணிந்து கொண்டார்.

இப்படியே ஒரே டிரஸ்ஸை ரஜினியும் டூப் நடிகரும் மாறி, மாறி போட்டுக் கொண்டு நடித்தார்கள்.

இதற்காக ரஜினி கோபப்படவோ, ஏன்.. குறைந்த பட்சம் முகம் சுளிக்கவோ கூட இல்லை. அதுதான் அவரதுப் பெருந்தன்மை” என்றார் ஜவஹர்.

- Advertisement -

Read more

Local News