தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கரும், நடிகர் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். நாயகனாக நடித்து வந்த ஜெய்சங்கர், ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். அந்த நேரத்தில் ரஜினி நடித்த முரட்டுக்காளை திரைப்படத்தில் ஈகோ பார்க்காமல் வில்லனாக நடித்தார். அது கிளிக் ஆகவே தொடர்ந்து வில்லனாகவே பல படங்களில் நடித்தார்.
எனவே, ரஜினிக்கும், இவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நடு இரவில் கூட ஜெய்சங்கரிடம் தொலைப்பேசியில் ரஜினி பல மணி நேரம் பேசுவாராம். அதேபோல், அடிக்கடி அவரின் வீட்டிற்கும் நேரில் சென்று நேரம் செலவழிப்பாராம்.
ரஜினி நடித்த தளபதி திரைப்படத்தில் ஏறக்குறைய அவரின் அப்பா வேடத்தில் ஜெய்சங்கர் நடித்திருப்பார். அதுதான் ஜெய்சங்கருடன் ரஜினி நடித்த கடைசி திரைப்படம். இவர் 2000ம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார்.
ஆனால் நெருங்கிய நண்பராக இருந்தும் அவரின் இறுதிகாரியத்துக்கு ரஜினி செல்லவே இல்லை.
இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. ஆனால், ஜெய்சங்கரின் மரணசெய்தியை கேள்விப்பட்டதும் அவரின் மகனை தொலைப்பேசியில் அழைத்த ரஜினி ‘நான் வீட்டிற்கு வரும்போது ஸ்டைலாக ஹாய் ஹாய் என சிரித்த முகத்துடன் உன் அப்பா என்னை வரவேற்பார். தற்போது அவரது உடலை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை. எனவே, நான் வரமாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்’ என சொல்லி இருந்தார்.
இந்த தகவலை ஜெய்சங்கரின் மகன் ஒரு நேர்காணலில் தெரிவித்து இருக்கிறார்.