Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

கமல்ஹாசனை திட்டித் தீர்த்த ரஜினி-அஜீத்-விஜய் ரசிகர்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொதுவாக அஜீத்-விஜய் ரசிகர்கள்தான் இணையத்தின் சமூக வலைத்தளங்களில் கடுமையாக சண்டையிட்டுக் கொள்வார்கள். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அஜீத் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் இருவரும் இணைந்து கமல்ஹாசனின் ரசிகர்களை கிண்டல் செய்தும், சண்டையிட்டும் தீர்த்தது புதுமையாக இருந்தது.

எல்லாம் ஒரேயொரு டிவீட்டால் வந்தது. நேற்றைக்கு முன் தினம் மாலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவீட்டர் பக்கத்தில் “விக்ரம்’ படத்தின் முதல் கட்ட போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்” என்று குறிப்பிட்டார். இதில்தான் பிரச்சினை ஆரம்பித்தது.

“Vikram first look from tomorrow evening at 5 pm” என்று மட்டுமே இதில் இருந்ததால் இதைச் சுட்டிக் காட்டிய அஜீத் ரசிகர்கள் இதுபோல் விஜய் படத்தை இயக்கும் இயக்குநர்கள் விஜய் பெயரைச் சொல்லாமல் அந்தப் படம் பற்றிய ஒரு செய்தியை வெளியிட முடியுமா என்று கேள்வியெழுப்பினார்கள்.

இதற்கு விஜய் ரசிகர்கள் தல என்ற பெயரைப் பயன்படுத்தாமல் அஜீத் படம் பற்றிய செய்தியை வெளியிட முடியுமா.. ஏன் இப்போது வலிமை படத்தின் ஒரு செய்தியைக்கூட அந்த இயக்குநரால் சொல்ல முடியவில்லை. இவராவது சொல்றாரே என்று பதில் சொல்ல.. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இடையில் ரஜினி ரசிகர்களும் நுழைந்து கமல்ஹாசன் தனது படத்தில் வேறு யாருக்கும் முக்கியத்துவமே தர மாட்டார். அவரே இன்றைக்கு இயக்குநருக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பற்றி செய்தியை சொல்லச் சொல்லியிருக்கிறாரே.. நல்லதொரு மாற்றம் என்று கிண்டல் செய்ய.. இதற்கு கமல் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்க…

கடைசியாக இந்தச் சண்டை அஜீத்-விஜய் ரசிகர்கள் மோதலில் துவங்கி ரஜினி-கமல் ரசிகர்களின் மோதலில் போய் முடிந்திருக்கிறது.

மேலும் படத்தின் போஸ்டர் வெளியானவுடன், “இது ‘விருமாண்டி’யை காப்பியடித்ததுபோல இருக்கிறது. சொந்த சரக்கையே திரும்பவும் காப்பியடிக்கிறாரா ஆண்டவர்.. அதற்குள்ளாக சரக்கு தீர்ந்துவிட்டதா..?” என்று ரஜினி ரசிகர்கள் கிண்டல் செய்ய.. அதுவே சில மணி நேரங்களில் டிரெண்ட்டிங்காகவும் மாறிப் போனது.  

தலை’கள் அமைதியாக இருந்தாலும், ‘தளபதிகள்’ மெளனம் காத்தாலும் படை வீரர்கள் மட்டும் அடங்க மறுக்கிறார்களே..!?

- Advertisement -

Read more

Local News