கயல்விழி என்ற பாண்டிய நாட்டு நடனமாதுவை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயல்வான் சோழ இளவரசனான ராஜராஜன்…
அவனை கொள்ளைக்காரன் குதிரை மேய்ப்பவன் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவாள் கயல்விழி.
அவன் இன்னும் மூர்க்கமாக.. இவள் தப்பித்து ஓடுவாள்.
ஒரு கட்டத்தில் கயல்விழிக்காகவே தஞ்சைக்கும் மதுரைக்கும் சண்டை மூண்டது.
அகிலன் எழுதிய கயல்விழி நாவல்தான் இது.
இதுக்கு ஏன்யா எம்.ஜி.ஆரை. முடிச்சுப் போடுறே என்று கேட்கலாம்.
இந்த கயல்விழி நாவலை தழுவித்தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.
படத்தில் வில்லன் (!) ராஜ ராஜனாக நம்பியார் நடித்தார். அவரதை எதிர்க்கும் நாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார்! வில்லனை வழக்கம்போல ஓட ஓட விரட்டினார்.
(அதே எம்ஜிஆர்தான் 1957-ல் ராஜராஜன் என்ற பெயரிலேயே ராஜராஜனாக நடித்தார்.)