Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பான் இண்டியா இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் அஜீத்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பான் இண்டியா என்பதைத் தாண்டி உலகம் முழுதும் தனது படங்களை கொண்டு சேர்க்கும் பிரமாண்ட – தெலுங்கு – இயக்குநர் ராஜமௌலி. அவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் ரசிகர்களை கவர்ந்தன. சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படமும்  பெரும் வெற்றி பெற்றது.

அகில இந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் இவர்தான்.

‘இவர் தமிழ் நடிகர்களுடன் கூட்டணி வைத்து படம் தர மாட்டாரா’ என  ரசிகர்கள் பலரும், இணையத்தில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனக்குப் பிடித்த தமிழ் நடிகர் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ராஜமவுலி.

அதில், ‘ஹீரோ என்றாலே அந்த காலத்தில் ஹேண்ட்சம், அழகான தோற்றம், எடுப்பான உடல் போன்ற போலியான கட்டமைப்புகளால் வர்ணிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் ஒரு ஹீரோ வெள்ளை முடியுடனும் நடிக்கலாம் என்ற ஒரு புதிய தோற்றத்தை முதலில் உருவாக்கியவர் அஜித் தான்’ என புகழ்ந்துள்ளார் ராஜமவுலி.

இதையடுத்து, அஜீத்தை வைத்து புதிய படத்தை ராஜமவுலி இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

- Advertisement -

Read more

Local News