Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

பிரபாஸின் ‘ராதே ஷியாம்’ படத்திலிருந்து காதல் கீதம் வெளியீடு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து ‘தரையோடு தூரிகை’ எனும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாமின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதல் ததும்பும் கீதமான ‘தரையோடு தூரிகை’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலில் படத்தின் நாயகனான பிரபாஸ் நாயகி பூஜாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இதயம் தொடும் இசை, இடங்களுக்கு ஏற்ற பொருத்தமான உடை அமைப்பு, கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு ஆகியவை இதை ஒரு கனவு பாடலாக ஆக்கி உள்ளன.

பாடலின் முக்கிய அம்சமாக நாயகன் மற்றும் நாயகிக்கு இடையேயான ‘கெமிஸ்ட்ரி’ உள்ளது. ரசிகர்களை இது மிகவும் கவரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏனென்றால், இப்பாடலின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் வெளியான போதே ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘தரையோடு தூரிகை’ பாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதோடு மட்டுமில்லாமல் படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வரும் ஜனவரி 14, 2021 அன்று பல்வேறு மொழிகளில் ராதே ஷியாம்’ வெளியாகிறது.

யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News