Friday, November 22, 2024

“நடிகர் சங்க அலுவலகம் தீப்பிடித்த பின்னணியில் விஷால் இருக்கிறார்” – நடிகர் ராதாரவியின் சந்தேகம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த டிசம்பர் 7-ம் தேதியன்று அதிகாலையில் சென்னை தி.நகரில் அபிபுல்லா சாலையில் இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில் நடிகர் சங்கத்தின் முக்கிய ஆவணங்களும் எரிந்து சாம்பலாகிவிட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. அதோடு, சென்ற ஆண்டு நடைபெற்ற தேர்தல் சம்பந்தமான ஆவணங்களும் எரிந்துவிட்டதாக வெளியில் பரவலாகப் பேசப்படுகிறது.

தற்போது இந்த அலுவலகம் பத்திரப் பதிவுத் துறையின் உயரதிகாரியான கீதாவின் பொறுப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதில் ஏற்பட்ட தீ விபத்தில் நடிகர் விஷாலுக்கு பெரும் பங்கு இருக்க வாய்ப்பிருப்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அவங்க சங்கத்தில் பொறுப்பேற்ற புதிதில் ‘சங்க டிரஸ்ட்டில் பணமே இல்லை’ என்றார்கள். ஏதோ ஒரு நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கித்தான் சங்கத்தை நடத்தியதாகச் சொன்னார்கள். பின்பு அந்தக் கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கூறினார்கள்.

இதுவே மிகப் பெரிய ஊழல். சங்கம் என்பது டிரஸ்ட். அதற்காக யாரும் கடன் வாங்க முடியாது. வரும் பணமெல்லாம் நன்கொடையாகத்தான் கருதப்படும். வந்த பணத்தை யாருக்கும் திருப்பித் தரவும் கூடாது. இதுவே சட்டப்படி தவறு. அவங்க செஞ்சதே மிகப் பெரிய ஊழல்.

இப்போது அலுவலகத்தில் தீ விபத்து நடந்திருக்கிறது. இதில் முக்கிய ஆவணங்கள் எல்லாம் எரிந்துவிட்டதாக சொல்கிறார்கள். நாங்கள் பல ஆவணங்களை, பத்திரங்களை அங்கே வைத்துவிட்டு வந்தோம். ‘எல்லாமே எரிஞ்சிருச்சு’ன்னு சொல்றதைப் பார்த்தால் சந்தேகமா இருக்கு.

அங்கே, இப்போது மேனேஜரா இருக்கும் பாலமுருகன் விஷாலின் கையாள். விஷால் ஆபீஸ்ல வேலை பார்த்தவர். அவரை வைத்து விஷால் இதைச் செய்திருக்கவும் சான்ஸ் இருக்குன்னு நான் நினைக்கிறேன். பாலமுருகனை போலீஸ் முறைப்படி விசாரித்தால் எல்லா உண்மையும் வெளில வரும்…” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

- Advertisement -

Read more

Local News