Thursday, November 21, 2024

Spotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.

இன்றைய டிஜிட்டல் உலகில் வாழும், இளைய தலைமுறையினரிடம் Podcast எனும் ஒலி வழியான நிகழ்ச்சிகள், மிக பிரபலமானதாக இருக்கிறது. இளைஞர்களின் உலகை ஆக்கிரமித்திருக்கும் Podcast உலகத்திற்குள மிக பெரிய அளவில், இன்றைய நவீன விசயங்களை, உள்ளூர் அறிஞர்களுடன் கலந்துரையாடும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, Spotify original நிறுவனம் நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜி  Podcast என்ற பெயரில் வழங்கவுள்ளது. 

இந்நிகழ்ச்சியை, ரேடியோ ஜாக்கி, நடிகர், காமெடியன், இயக்குநர், வர்ணனையாளர் மற்றும் சமூக ஆர்வலர் பாலாஜி பட்டுராஜ் எனும் R.J.பாலாஜி  தொகுத்து வழங்குகிறார். வாராவாரம் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சி இன்று முதல் துவங்கவுள்ளது.

பன்முக திறமைகள் மூலம் இளைஞர்களிடம் மிகப் பெரும் பிரபல்யத்தை பெற்றிருக்கும் R.J.பாலாஜி அவர்கள், தனது பிரத்தியேகமான அசத்தும் பேச்சு திறமையால், புது வகையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இன்றைய நவீன உலகில் இந்தியா எதிர்கொள்ளும்,  பொது பிரச்சனைகள் குறித்து,  அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் உரையாடி, அவர்களின் பார்வைகளை, அனுபவங்களை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

இது குறித்து R.J.பாலாஜி பேசும்போது, “Spotify original நிறுவனத்துடன் இப்படியொரு அழகான நிகழ்ச்சியில், இணைந்து பணியாற்றுவது மிகப் பெரும் மகிழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி எனது பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக, புதிதானதை  கற்றுக் கொள்ள,  எனக்கொரு வழிகாட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சி இன்றைய இந்தியாவின் பொது பிரச்சனைகளை, முக்கியமாக இணையத்தில் தவறான வகையில் பரப்பப்படும் பொய்யான கருத்துக்களில்,  ரசிகர்களுக்கு  சரியான விழிப்புணர்வை  எடுத்துரைப்பதாக இருக்கும். எந்தவித பொறுப்பும் இல்லாமல், எல்லாம் கொட்டிக் கிடக்கும் டிஜிட்டல் உலகில், இந்நிகழ்ச்சி இன்றைய அதிமுக்கிய பிரச்சனைகளில் மிகப் பொறுப்புடன்,  நகைச்சுவை கலந்து,  ரசிகர்களை ஒரு அற்புத பயணத்திற்கு அழைத்து செல்லும்…” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News