Wednesday, November 20, 2024

புன்னகை மன்னன் லிப்லாக் காட்சி: ரேகாவுக்கே தெரியாமல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1986-ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தில் கமல்ஹாசன் ரேகாவுக்கு முத்தமிடும் காட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது

இந்த படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் கமல் ரேகா இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து பாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது இந்த பாடலில் ஏதாவது தனித்துவம் வேண்டும் என்று இயக்குனர் கே.பாலச்சந்தர் கேட்க, என்ன பண்ணலாம் என்று இருவரும் யோசித்துள்ளனர். அப்போது பாலச்சந்தர் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

இந்த பாடல் முடிந்தவுடன் கமல் ரேகா இருவரும் அருவியில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும். அந்த காட்சியில் பேசும்போது ரேகாவை கண்கைளை மூட வேண்டும் என்று சொல்லிவிடுகிறேன். அவர் கண்களை மூடியதும் ரேகாவின் உதட்டில் முத்தம் கொடுத்துவிடு என்று கமல்ஹாசனுக்கு ஐடியா கொடுத்துள்ளார் பாலச்சந்தர். ஆனால் கமல்ஹாசன் தயங்கி இருக்கிறார்.

ஆனால் கே.பாலச்சந்ர் எல்லாம் 30 வினாடிகளில் முடிந்துவிடும் சீன் எடுத்து முடிந்தவுடன் நான் ரேகாவிடம் பேசிக்கொள்கிறேன் என்று கூறியதை தொடர்ந்து கமல் ரேகாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத ரேகா என்ன நடந்தது என்று தெரியாமல் விழிக்க அதன்பிறகு கே.பாலச்சந்தர் ரேகாவுக்கு விஷயத்தை சொல்லி சமாதானம் செய்துள்ளார். இது குறித்து கமல் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News