தன் அழகாலும், நடிப்பாலும் உலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏஞ்சலினா ஜோலி.
ஹாலிவுடில் மிக அதிகமான சம்பளம் பெரும் நடிகை இவர்தான். ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது பெற்றவர். இதையெல்லாம் விட, ஆறு குழந்தைகளின் தாய்!
மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மிதி, சால்ட், தி டூரிஸ்ட் போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டையும் கடந்து பிரபலமானார். ஒரு நடிகையாக ஆக்ஷன், கவர்ச்சி அவதாரம் எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
அதே நேரம், கல்வி, இயற்கை பாதுகாப்பு, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார்.
அகதிகளின் பாதுகாப்புக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு தூதராக நியமனம் செய்யப்பட்ட ஜோலி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்பவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கான உரிமைகளை பெறவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு நேரடியாக சென்று அங்கு அவர்களுக்கு தேவையான பல்வேறு செயல்பாடுகளையும் செய்துள்ளார்.
இந்த நிலையில் மீபத்தில் 48வது பிறந்தநாளை கொண்டாடினார். இது குறித்து அவர், “திரையுலகில் தொடர்வதோடு மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதும், சமூக அக்கறையுள்ள விசயங்களில் ஈடுபடுவதும் தொடரும்” என அறிவித்து உள்ளார்.