தெலுங்கு நடிகை சனா, சுமார் 200 படங்களில் அக்கா, அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து உள்ளார். பெரும்பாலும் அம்மா வேடம்தான்.
தற்போது இவர் நடித்துள்ள மெட்ரோ காதல் என்ற தொடரில் சிறு பையனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்து உள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சனா, “அத்தொடரின் இயக்குனர் கருணா குமார் – எழுத்தாளர் காதர் பாபு ஆகியோர் கதை சொன்ன விதம் பிடித்திருந்தது. தன் மீது அக்கறையே காட்டாத.. சித்திரவதை செய்யும் குடிகார கணவனிடம் அல்லாடும் மனைவி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளேன்.
இதனால் அவள் ஆண்களை வெறுக்கிறாள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பையன் அறிமுகமாகிறான். அவனுடன் தன்னை அறியாமல் ஈர்ப்பு கொள்கிறாள்.
ஒரு பெண் தனது ஆசைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதையும், குடும்ப பொறுப்புகளை அவர் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் காட்டுகிறது இந்த கதை.
நிஜ வாழ்க்கையில் இந்த சிக்கலை பல பெண்கள் எதிர்கொள்கின்றனர். என்னுடைய கேரக்டரின் மூலம் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி கொடுக்கப்பட்டது. கதை நிஜத்துக்கு நெருக்கமாக இருப்பதால் அந்தக் காட்சிகளில் நடித்தேன். இது போன்ற யதார்த்தமான கடினமான வேடங்கள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று பதில் அளித்து இருக்கிறார்.