‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளதால், அப்படத்தின் நாயகன் தனுஷ், இயக்குநர் கவுதம் மேனன் இருவருக்கும் கார் மற்றும் பைக்குகளை வாங்கிக் கொடுத்து பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்.
படத்தின் நாயகனான சிம்புவுக்கு 92 லட்சம் மதிப்புள்ள டயோட்டா vellfire காரினை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர்.

அதேபோல் இயக்குநர் கவுதம் மேனனுக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு மேலான மதிப்புள்ளது.
சமீபத்தில் வெளியான கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றபோது அதன் இயக்குநருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார்.
தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசனும், பாலோ பண்ணியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.