Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

நடிகை பிரியாமணியின் திருமண வாழ்வில் சிக்கல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை பிரியாமணியின் குடும்ப வாழ்க்கையில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அவருடைய கணவரான முஸ்தபா தனது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக பிரியாமணியை கல்யாணம் செய்திருப்பதாக முஸ்தபாவின் முதல் மனைவியான ஆயிஷா புகார் கூறியுள்ளார். இது பிரியாமணியின் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த நடிகை பிரியாமணி 2003-ம் ஆண்டு கண்களால் கைது செய்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்திருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் அமீரின் இயக்கத்தில் உருவான ‘பருத்தி வீரன்’ படத்தில் ‘முத்தழகி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார் பிரியாமணி.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியாமணி 2017-ம் ஆண்டு திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட பிரபமான தி பேமிலி மேன்’ வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். கடந்த நான்கு வருடங்கள் எந்தப் பிரச்சனையுமில்லாமல் கழிந்த பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

“நானும், முஸ்தபாவும் எங்களது இரு குழந்தைகளின் நலன் கருதி இதுவரை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. அதனால், முஸ்தபாவின் இரண்டாவது திருமணம் செல்லாது” என ஆயிஷா கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முஸ்தபா, “2010-ம் ஆண்டிலேயே நானும், ஆயிஷாவும் பிரிந்துவிட்டோம். 2013-ம் ஆண்டில் சட்டப்படி விவகாரத்தும் பெற்றோம். அதன் பின்புதான் நான் பிரியாமணியை திருமணம் செய்தேன். பிரியாமணியுடன் திருமணம் முடிந்து கடந்த 4 ஆண்டுகளாக என் மகள்களுக்கு நான் தர வேண்டிய ஜீவனாம்சத் தொகையை சரியாகக் கொடுத்து வருகிறேன். நான்காண்டுகள் சும்மாயிருந்துவிட்டு இப்போது தேவையில்லாமல் ஆயிஷா பிரச்சனையை கிளப்புகிறார்..” என கூறியுள்ளார்.  

ஆனால், தனது முடிவில் உறுதியாக இருக்கும் ஆயிஷா, “பிரியாமணியை திருமணம் செய்கையில் தானொரு பேச்சிலர் என்றுதான் முஸ்தபா நீதிமன்றத்தில் கூறினார். குழந்தைகள் நலனுக்காக பிரச்சனைகள் தீரும் என இதுவரை காத்திருந்தேன். இனி முஸ்தபா மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..” என கூறியுள்ளார்.

ஆயிஷாவின் இந்த திடீர் அதிரடி பேட்டியால் பிரியாமணியின் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடிகை பிரியாமணி இதுவரையிலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

- Advertisement -

Read more

Local News