Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விஜய் மீது பிரேமலதா கோபம்.. இதுதான் காரணம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் அரசில் திட்டம் குறித்து கேட்கப்பட்டதற்கு, , விஜயகாந்த் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான் பிரேமலதா, “விஜயகாந்த் போல யார் வர நினைத்தாலும் மோசமான விளைவுகள்தான் ஏற்படும்” என்று காட்டமாக பதில் அளித்தார்.

இது குறித்து பேசிய பத்திரிகையாளர் அந்தணன், “செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்ததன் மூலம்தான் விஜய் பிரபலமானார் என்று சொல்ல முடியாது. தன்னுடைய உழைப்பால் விஜய் உயர்ந்து இருக்கிறார். எந்த சூழ்நிலையில் விஜயகாந்த் விஜய்க்கு உதவி செய்தார் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு விஜய் என்ன கைமாறு செய்து இருக்கிறார்.

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் கேப்டனை பல பிரபலங்கள் போய் சந்தித்து கொண்டிருக்க இது நாள் வரைக்கும் விஜய் அவரை போய் சந்திக்கவே இல்லை. ஏன் அவர் உடல் நலம் குறித்தும் விசாரிக்கவும் இல்லை. இதுதான் அவர் காட்டும் நன்றி கடனா” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதன் மூலம் விஜய் மீது பிரேமலதாவுக்கு என்ன கோபம் என்பது தெரிந்துவிட்டது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News