பொதுவாக விஜயகாந்த், தனது படங்களில் நடனத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். இதற்கு விதிவிலக்காக அமைந்தது ஒரே ஒரு படம்.
தக்சினாமூர்த்தி இயக்கத்தில் விஜயகாந்த், பானுபிரியா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆனந்தராஜ், நெப்போலியன் ஆகியோரின் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பரதன்” படம்தான் அது.
இது குறித்து நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ““பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. குறிப்பாக இதில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடல் இப்போதும் ரசிக்க வைக்கும்.
இந்த படத்துக்கு பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்றினார். அதுவரை நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத விஜயகாந்தை, சிறப்பாக நடனமாட வைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கேற்ப ஸ்டெஸ்கள் – நடன அசைவுகளை – உருவாக்கினார்.
ஆரம்பத்தில் விஜயகாந்த், நடனத்துக்கு இவ்வளவு மெனக்கடல் தேவையா என கேட்க, பிரபு தேவா வற்புறுத்தி இருக்கிறார்.
இதனால், விஜயகாந்தும் பயிற்சி எடுத்து சிறப்பாக நடனமாடினார். அதுவரை யாரும் பார்க்காத ஒரு நடனத்தை ஆடியிருந்தார் விஜயகாந்த். மிகவும் ஸ்டைலிஷாக அந்த காட்சியில் இருப்பார்.
அதற்கு முன்பும் பின்பும் அப்படி ஓர் நடனம் விஜயகாந்துக்கு அமைந்ததில்லை” என்றார் பிரபுதேவா.