அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால், அது தவறு என்பது தெரியவந்துள்ளது.
லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய், ஓய்வுக்காக வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.