Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்! பரபரப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். அவருடன் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை சுட்டிக்காட்டி பேசினார்.

அவருடைய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்த படம் சாதி அடிப்படையிலான சர்ச்சை கதையம்சத்தில் தயாராகி உள்ளதாக வலைத்தளத்தில் சிலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்த படத்தை தடை செய்ய வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தேனி மாவட்டத்தில் பல இடங்களில் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த போஸ்டரில் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உதயநிதி நடிப்பில் உருவாகி வந்த ஏஞ்சல் படத்தின் தயாரிப்பாளரான ராம சரவணன் மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News