Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

அரசியல்: ரஜினி பாணியில் அதிரவைத்த விஷால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் மார்க் ஆண்டனி படக்குழுவினர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

அப்போது ஒரு மாணவர், ‘நீங்கள் விஜய்யின் தீவிர ரசிகர். அவருடன் இணைந்து அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேள்வி கேட்டார்.

இதற்கு விஷால், ‘இது கடவுளால்தான் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயம்’ என பதில் அளித்தார்.  விஷாலின் இந்த பதில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

‘அட.. ரஜினி பாணியிலேயே இவரும் பதில் சொல்கிறாரே’ என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், “ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் விசால். அப்போது தேர்தல் குளறுபடி குறித்து புகார் அளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்குச் செல்லாமல், தமிழ்நாடு தேர்தல் ஆணைத்துக்குச் சென்றார். இது நகைப்புக்கு இடமானது. இந்த நிலையில் இப்போதும் அரசியல் பேசுகிறாரே” என்று நெட்டிசன்கல் கலாய்த்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News