Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ராகவா லாரன்ஸ் பட குழுவினர் மீது போலீஸில் புகார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான படம் ‘ருத்ரன்’. ‘ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்’ சார்பாக கதிரேசன் தயாரித்து இயக்கியிருந்தார்.  இப்படம், நாளை ஓடிடியில் வெளியாகிறது.

இந்த நிலையில் வடபழனி காவல் நிலையத்தில் நடன அமைப்பாளர் ராஜ் என்பவர் ஒரு புகாரை அளித்துள்ளார்.

அதில், “ருத்ரன் படத்துக்காக, நடனக் கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன். ஆனால்அவர்களுக்கு  பல நாட்கள் ஆகியும் சம்பளம் தரவில்லை. திரைப்படத்தின் மேலாளர், பணம் தர முடியாது எனப் பேசினார்.

இது தொடர்பாக பலமுறை, திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சி-யில்  புகார் அளித்திருந்தேன். ஆனால், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

10 நாட்கள் கடுமையாக உழைத்து நடனம் ஆடிய கலைஞர்களுக்கு சம்பளம் வாங்கி தராமல் மேனேஜர் மற்றும் ஏஜென்ட் ஸ்ரீதர் ஆகியோர் ஏமாற்றி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை வாங்கித் தர வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

- Advertisement -

Read more

Local News