Thursday, November 21, 2024

கவிஞர் கண்ணதாசனின் நிறைவேறாத ஆசை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிழ் சினிமா உலகில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், எழுதி புகழ் பெற்ற கவிஞராக விளங்கியவர் கண்ணதாசன். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர் கண்ணதாசன். தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞருக்கு ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது ஆசை.

1970-களில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ரஜினி இருந்தார்.அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த அவர் மூன்று முடிச்சு அவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

அந்த காலகட்டத்தில் கண்ணதாசனின் மகள் திருமணம் சென்னை தி.நகர் பாலாஜி திருமண மண்டபத்தில் நடந்தது.பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

 ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டு சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிக்கும்படி பலரும் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் சலிக்காமல் செய்து காட்டினாராம். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

 கே.பாலச்சந்தரை  அழைத்து உங்கள் இயக்கத்தில் ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசன் கூறியிருக்கிறார். இதற்கான வேலைகள்  

தொடங்கியபோது கவிஞர் கண்ணதாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அதன் பிறகு கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை ரஜினியை சந்தித்து படம் குறித்து பேசிய போது ரஜினியும் சம்மதம் கூறியிருக்கிறார். ஆனால் எதோ காரணத்தால் கண்ணதாசன் குடும்ப நிறுவன தயாரிப்பில் ரஜினியால் நடிக்க முடியாமல் போய்விட்டது. கண்ணதாசனின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டது.

- Advertisement -

Read more

Local News