Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வெற்றிமாறன் வழங்கும் பேட்டைக்காளி வெப் சீரீஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆஹா தமிழ் ஓடிடி தளத்துடன்  இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜல்லிக்கட்டு’ உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற அடிப்படையில் பல அசத்தலான படைப்புகளை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஆஹா தமிழின் அடுத்த படைப்பான ‘பேட்டைக்காளி’, ஜல்லிக்கட்டு கதையை அடிப்படையாகக் கொண்டது.

சமகால தமிழ் சினிமாவில் கவனிக்கத்த இயக்குநர்களில் ஒருவரான  வெற்றிமாறன் படைப்பாக வரும் இந்த இணைய தொடரில் மக்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு ஜல்லிக்கட்டு உலகத்தை பார்ப்பார்கள்.

ஏற்கனவே ‘பேட்டைக்காளி’ என்ற இந்தத் தலைப்பு, பார்வையாளர்காளிடையே ‘யாரந்த பேட்டைக்காளி’ என்ற ஆர்வத்தை உருவாக்கி உள்ளது.

இந்த இணையத் தொடர், நல்ல கதையம்சத்துடன் கூடிய நடிகர்கள் மற்ற தொழில் நுட்பக் குழுவை கொண்டது.

இயக்குநர் வெற்றி மாறன் இதன் ஷோ-ரன்னராக இருந்தாலும் ‘பேட்டைக்காளி’ படத்தை வெற்றி மாறனின் நீண்ட கால உதவி இயக்குநரான ராஜ்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் குழு குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

- Advertisement -

Read more

Local News