Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

ஜல்லிக்கட்டு விளையாட்டின் உண்மைக் கதையைச் சொல்லும் ‘பேட்டைக்காளி’ வெளியானது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆஹா’ தமிழ் OTT தளத்தின் பிரம்மாண்டமான படைப்பான ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர், மாணவியர் முன்னிலையில் நடந்தது.

இதன் டிரெயிலர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும் நடிகர்களின் திறமையான நடிப்பை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் டைட்டில் பாடல் பார்வையாளர்கள் மத்தியில் ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடல் ‘பேட்டைக்காளி’யின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், ‘பேட்டைக்காளி’யின் உலகத்திற்குள்ளே பார்வையாளர்களை அழைத்து செல்லும் விதமாக ஃப்ர்ஸ்ட் க்ளிம்ப்ஸ்ஸூம் அங்கு திரையிடப்பட்டது.

இந்தப் பேட்டைக்காளி’ இணையத் தொடர் ‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி முதல் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு எபிசோட் வெளியாக உள்ளது. இனி வரும் வாரங்களில் வெளியாகும் எபிசோட்கள் அனைத்தும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு பிடித்ததாக அமையும்.

ஆஹா’ தமிழ் OTT தளத்தின் உறுதிப்படி 100% தமிழ் கண்டெண்ட் என்ற வகையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை இந்த முறையில் கையில் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் வெப் சீரிஸ் இதுவாகும்.

இந்தப் ‘பேட்டைக்காளி’ உலகம் காளைகளை அடக்குபவர்களுக்கும் வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் வரலாற்றுப் பிரிவு போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது.

வளர்ப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பும் முக்கிய உணர்ச்சிகளாக ’பேட்டைக்காளி’யில் இருப்பதால், ஜல்லிக்கட்டு விளையாட்டுக் குறித்தான அனுபவத்தை நிச்சயம் பார்வையாளர்களுத் தரும்.

நடிகர்கள் கலையரசன், கிஷோர், வேலன் ராமமூர்த்தி, ஷீலா மற்றும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ அந்தோணி ஆகியோரின் திறமையான நடிப்பு முன்னோட்டக் காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

La. ராஜ்குமார் இயக்க, தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு வேல்ராஜ் மற்றும் சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ‘பேட்டைக்காளி’ இணையத் தொடரின் இயக்குநர் ராஜ்குமார், “ஆரம்ப காலத்தில் மனிதர்கள் காடுகளில் சுற்றித் திரிந்தனர். காளைகள் அவர்கள் வாழ்வில் வந்த பிறகுதான் விவசாயம் மற்றும் வளர்ப்பு பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர்.

எனவே, காளைகள் மக்களின் வாழ்வில் வந்த பிறகுதான் கலாச்சாரத்தின் வருகை ஏற்பட்டது. முற்கால மனிதர்கள் காளைகளை அடக்கியவிதம் இன்றும் விளையாட்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் நாட்டிலேயே நம் மாநிலத்தில் மட்டும்தான் நடக்கிறது.

நமது கலாச்சாரத்தில் காளைகளின் முக்கியத்துவம் குறித்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜல்லிக்கட்டு உலகில் சொல்லப்படாத கதைகளை ஆராய்வதற்காகவும் இந்த இணையத் தொடரை உருவாக்கி உள்ளோம்” என்றார்.

- Advertisement -

Read more

Local News