Saturday, September 21, 2024

அம்மு அபிராமி, கோமல் சர்மா நடிக்கும் ‘பெண்டுலம்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் வருவது அரிது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக ‘பெண்டுலம்’ படம் உருவாகிறது.

இந்தப் படத்தை SURYA INDRAJIT FILMS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திரவியம் பாலா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ‘அசுரன்’ படப் புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ்ரீபதி, ்ரீகுமார், T.S.K, விஜித்,FIR ராம்,  ராம் ஜூனியர் எம்.ஜி.ஆர்., பிரேம்குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – திரவியம் பாலா (SURYA INDRAJIT FILMS), இயக்குநர் – B.சதீஸ் குமரன், இசை – சைமன் கிங், ஒளிப்பதிவு – ஆனந்த், படத் தொகுப்பு – ராம் சதீஷ், கலை இயக்கம் – K.B.நந்து விஜித், பாடல்கள் – விவேகா, கு.கார்த்திக், சண்டைப் பயிற்சி இயக்கம் – டான் அசோக், நடனப் பயிற்சி இயக்கம் – ராஜேஷ், ஒப்பனை – அப்துல் ரசாக், உடைகள் – பெருமாள் செல்வம், விஷுவல் எஃபெக்ட்ஸ் – டோனி மேக்மித், தயாரிப்பு நிர்வாகி – பழனிவேல்.V., பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM), புகைப்படங்கள் – ஜூடி, போஸ்டர் டிசைனர் – ராஜ் டிசைனர் பாயிண்ட்.

20 ஆண்டுகளாக கேமரா பின்னணியிலும், ஒளிப்பதிவாளராக பல உலக விருதுகளை குவித்திட்ட குறும் படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்த B.சதீஸ் குமரன் இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்குநர் ஷங்கரின் ஐ’ படத்தில் மேக்கிங் கேமராமேனாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக 8 கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.

சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக் குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் பூஜை நிகழ்வு திரை பிரபலங்கள், படக் குழுவினர் கலந்து கொள்ள எளிமையாக இன்றைக்கு நடந்தது.  

- Advertisement -

Read more

Local News