அஜய் பூபதி இயக்கத்தில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கும் படம் ‘செவ்வாய்கிழமை’. சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிக்கும் பாயல் ராஜ்புத் கதாபாத்திரத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் பாயல் மேலாடையின்றி கவர்ச்சிகரமாக தோற்றம் அளிக்கிறார். அவரது இடது கை ஆட்காட்டி விரல் மீது ஒரு பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போன்று வெளியாகி உள்ளது.
தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
“‘செவ்வாய்கிழமை’ திரைப்படம் 90களின் கிராமத்தை மையமாக கொண்டுள்ள ஆக்ஷன் திரில்லர் ஜானர் படம். நம் மண்ணின் பாரம்பரிய தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும்” என இயக்குநர் அஜய் பூபதி கூறி உள்ளார்.
.