Touring Talkies
100% Cinema

Tuesday, November 25, 2025

Touring Talkies

பசுபதியின் ‘தண்டட்டி’ ட்ரெய்லர் எப்படி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா உருவாக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம்  ‘தண்டட்டி’. இந்தப் படத்தை ‘சர்தார்’, ‘ரன் பேபி ரன்’ படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பசுபதியுடன், ரோஹினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பாடல்களுக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இறந்துவிட்ட மூதாட்டி தங்கப்பொண்ணு, சாத்திர சடங்குக்காக நாற்காலியில் அமரவைக்கப்பட்டு இருக்கிறாள். அப்போது, ‘தங்கப் பொண்ணு காதுல இருந்த தண்டட்டிய காணோம்டி’ என்ற குரல் ஒலிக்கிறது.  இதிலிருந்தே படத்தின் மொத்த கதையும் இந்த ஒற்றை வசனத்தை மையப்படுத்திதான் நகரும் என்பதை உணர்த்துகிறது.

காணாமல் போன தண்டட்டியை கண்டிபிடிக்கும் காவல் துறை அதிகாரியாக பசுபதி  தனி ஆளாக தவிப்பதும், விவேக் பிரசன்னா குடித்துவிட்டு ரகளை செய்வதும்  ரகளையாக உள்ளது.

இடையில் தீபா சங்கரின் அதிரடி ஆர்ப்பாட்டம் ரசிக்கவைக்கிறது.

அதே போல பாடல்கள் இரண்டும் தாளம்போட வைக்கின்றன.

படம் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மொத்தத்தில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை, டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்படுத்தி உள்ளன.

தண்டட்டி டிரெய்லர்

- Advertisement -

Read more

Local News