Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

பா.ம.க. ராமதாஸை குறிவைத்தாரா இயக்குநர் அமீர்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “பருத்திவீரன்”. வசூல் ரீதியாக வெற்றி பெற்றதோடு, தரமான படம் என்கிற பாராட்டையும் பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக ப்ரியா மணிக்கு  தேசிய விருதும் கிடைத்தது. அதே போல் இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளருக்கு சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதும் கிடைத்தது.

 இப்படத்தில், ஒரு பிளாஷ்பேக் காட்சி வரும். அதில்  ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியை (கார்த்தியின் பெற்றோர்)  ஒரு லாரி இடித்து கொல்வதுபோல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த லாரியின் மேல் ராமதாஸ் என்று எழுதப்பட்ட ஒரு பெயர் பலகையும் இருக்கும்.

தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸுடன் தொடர்பு படுத்தியும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீரிடம் “லாரியின் மேல் ராமதாஸ் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது தற்செயல்தானா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “குறிப்பிட்ட காட்சிக்காக ஒரு லாரி வேண்டும் என்றேன். கொண்டு வந்தார்கள். மற்றபடி திட்டமிட்டு ஏதும் செய்யவில்லை” என்றார்.

- Advertisement -

Read more

Local News