Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

விமர்சனம்: பாட்னர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிராமத்தில் அப்பா மற்றும் தங்கையுடன் வசிக்கிறார் ஆதி. குடும்பம் கடனில் தவிக்கிறது. கடன் கொடுத்தவர் அசலையும் வட்டியையும் தரவில்லை என்றால்  ஆதியின் தங்கையை கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்று அடவடித்தனம் செய்கிறார். இதனால் பணத்தை புரட்ட  சென்னையில் இருக்கும் நண்பன் யோகிபாபுவை சந்திக்க கிளம்புகிறார் ஆதி.

அங்கு யோகிபாபு சட்ட  விரோதமான செயல்களை செய்து பிழைப்பு நடத்துகிறார்.  வேறு வழியில்லாமல் அவரது  உடந்தையாக இருக்கிறார்.

அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனின் ஆய்வகத்தில் உள்ள ஒரு விசேஷ கண்டுபிடிப்பின் ரகசியத்தை திருடிக் கொடுத்தால் பணம் தருவதாகச் சொல்கிறார் வில்லன்.

ஆதியும், யோகிபாபுவும் பணம் வாங்கிக்கொண்டு களத்தில் இறங்குகிறார்கள். அதில் சில பிரச்சினைகள் வருகிறது.

அதிலிருந்து தப்பித்தார்களா என்பது கதை.

நகைச்சுவை நாயகன் வேடம் என்பதால் முடிந்தளவுக்கு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார் ஆதி. தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை முழுமையாக வெளிப்படுத்தி உள்ளார் ஹன்சிகா. பெண்ணாக இருந்து ஆணாகவும், ஆணாக இருந்து பெண்ணாகவும் வெளிப்படுத்த வேண்டிய சிக்கலான கதாபாத்திரத்தை சிம்பிளாக கையாண்டு கவனிக்க வைக்கிறார்.

படத்தின் இரண்டாவது நாயகன் யோகிபாபு. வழக்கம்போல் சிரிக்க வைக்கிறார். இன்னொரு நாயகியாக வரும் பாலக் லால்வாணிக்கு வாய்ப்பு மிக குறைவு.

ரவிமரியா, பாண்டியராஜன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான்விஜய், தங்கதுரை, ரோபோ சங்கர், முனிஸ்காந்த் என அனைவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

சில இடங்களில் வரும் தேவையில்லாத ஆபாச குறியீடு, இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்து இருக்கலாம்.

ஷபீர் அகமதுவின் ஒளிப்பதிவு சிறப்பு. துள்ளலான இசை  அளித்து இருக்கிறார்  சந்தோஷ் தயாநிதி. லாஜிக் பார்க்காமல் ரசிக்கலாம்.

 

- Advertisement -

Read more

Local News