பார்த்திபனின் முதல்படமான புதியபாதை பெரும் வெற்றி பெற்றது. இதில் அவரது ஜோடியாக சீதா நடித்திருந்தார்.
ஆனால் ஆரம்பத்தில் பல நடிகைகளிடம் பார்த்திபன் கதை சொல்லியும், அவர்கள் மறுத்துவிட்டார்கள். சீதாவுக்கு கதை பிடிக்கவே உடனே ஒப்புக்கொண்டார்.
படப்பிடிப்பு ஒரு புறம் போய்க்கொண்டு இருக்க, இருவருக்கும் காதல் மலரந்தது. ஆனால் இருவருமே பரஸ்பரம் ஐ லவ் யூ சொல்லிக்கொள்ளவில்லை.
பார்த்திபன், சீதாவிடம், “அந்த மூணு வார்த்தையைச் சொல்லிடுங்க” என தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து, வீட்டில் இருந்து போன் மூலம் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறார் சீதா.
போனின் இன்னொரு லைனில் இருந்து இதை சீதாவின் தந்தை கேட்டுவிட்டார்.
ஆத்திரமான அவர், சீதாவுக்கு பல படங்களை புக் செய்தார். காலை முதல் இரவு வரை மூன்று வெவ்வேறு படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டிய நிலை.
சீதாவும் பார்த்திபனும் சந்தித்துக்கொள்ளவே முடியாத நிலை.
இதை ரகசியமாக கடிதம் எழுதி தனக்கு நம்பிக்கையானவர் மூலம் பார்த்திபனுக்கு கொடுத்து அனுப்பினார் சீதா. பதிலுக்கு பார்த்திபனும், விரைவில் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்து அதன்படி திட்டத்தையும் விவரித்து கடிதம் கொடுத்தார்.
குறிப்பிட்ட தேதியில் காலை ஐந்தரை மணிக்கு, படப்பிடிப்புக்காக சீதா காரில் செல்ல.. வழியில் காரை மறித்து தனது காரில் ஏற்றிக்கொண்டார் பார்த்திபன். பிறகு திருமணம் நடந்தது.
அப்போது ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த சீதா, “திரைப்படங்களில்தான் அதிரடி கதாபாத்திரங்களில் நடிப்பார் என்றால், நிஜத்திலும் அடாவடியாக காதலியை கடத்தி வந்து திருமணம் செய்துகொண்டார்” என சீதா நகைச்சுயாக கூறினார்