Friday, April 12, 2024

முக்கியமான பான் இந்திய படங்களின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பான் இந்திய படமாக உருவாகி வரும் இரண்டு முக்கியமான இந்தியத் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்ததாக ‘ஆதி புருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3-டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது.

இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சச்சேத் பரம்பரா இசையமைக்கிறார். இயக்குநர் ஓம் ராவத் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஆதி புருஷ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்னொரு பான் இந்திய திரைப்படமான ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலமாக அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் தயாராகியுள்ளது.

இந்த ‘ராக்கெட்ரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இப்போதெல்லாம் எந்தப் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பல மாதங்களுக்கு முன்பாகவே தங்களுடைய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிடுகிறார்கள். இதனால் அகில இந்திய அளவில் தியேட்டர்களுக்கான போட்டிகள் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

நல்ல முடிவுதான்..!

- Advertisement -

Read more

Local News